ஜோகூரில் சாலை விபத்து: சிங்கப்பூரர் மீது கார் மோதல்..!!

ஜோகூரில் சாலை விபத்து: சிங்கப்பூரர் மீது கார் மோதல்..!!

ஜோகூர் பாருவில் நடந்த சாலை விபத்தில் சிங்கப்பூரர் மீது கார் மோதிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 3 ஆம் தேதி பிற்பகல் 3:40 மணி அளவில் ஜாலான் துன் அப்துல் ரசாக் பகுதியில் இந்த சாலை விபத்தானது நடந்துள்ளது.

பயண முகவராக பணி புரியும் அந்த சிங்கப்பூரர், சாலையைத் திடீரெனக் கடக்க முயலும் போது அவ்வழியாக சென்ற “கிராப்” வாடகை வாகன ஓட்டுநரால் காரைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரர் மீது கார் மோதியதில், அவரின் கை, கால் மற்றும் தலைப்பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்து குறித்த காணொளி சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. அந்த நபர் பாதசாரிகளுக்கான சாலைக் கடப்பு இல்லாத இடத்தில் சாலையை கடக்க முயன்றது தெரிகிறது. அவருக்கு அருகிலேயே நடை மேம்பாலம் இருந்தும் அவர் அந்த சாலையை கடந்துள்ளார் என்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

விபத்து குறித்த செய்தியானது , தெற்கு மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது .

தகவல் கிடைத்ததையெடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த அந்த நபரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து விதிமுறைகளை மதித்து அதைப் பின்பற்ற வேண்டும்; மேலும் அனுமதியற்ற இடங்களில் இதுபோன்ற சாலையை கடக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்; விதிமுறைகளை மீறி உயிருக்கு ஆபத்தான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

காயமடைந்த சிங்கப்பூரர் தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்த விபத்து குறித்த விசாரணையை காவல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK