புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..!

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..!

சிங்கப்பூர் : உள்ளூர் மின்சார வாகனப் பகிர்வு நிறுவனமான BlueSG, ஒரு புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சேவைகளை நிறுத்திய பிறகு, BlueSG “பிளக்ஸார்” (Flexar) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பிராண்டின் சோதனை ஓட்டமானது வரும் புதன்கிழமை (ஏப்ரல் 15) அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளதாக Flexar அறிவித்துள்ளது.

இந்த வாகனக் குழுவில் மின்சார மற்றும் உள் எரிப்பு இயந்திர வாகனங்கள் இரண்டும் இடம்பெற உள்ளதாகவும், இது புங்கோல், செங்காங், ஹெங்காங், டம்பைன்ஸ், ஆங் மோ கியோ மற்றும் டோவா பேயோ போன்ற குடியிருப்புப் பகுதிகள் உட்பட மத்திய, வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு தைவானை உள்ளடக்க உள்ளதாக Flexar கூறியுள்ளது.

வாகனத் தேவை மற்றும் செயலியில் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகப் பயனர் கருத்துக்களைச் சேகரிப்பதே இந்த தொடக்க சோதனையின் நோக்கம்
என சுட்டிக்காட்டி உள்ளது.

BlueSG – இன் நிறுத்தத்திற்கு பிறகு, உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை பயணிகளுக்கு இடையேயான கார் பகிர்வுத் தளமே இந்த Flexar.

இந்த தலமானது ஒரு ஸ்மார்ட் வாகனக்குழு மற்றும் வாகன நிறுத்தமிட மேம்பாட்டு அமைப்பு, வசதியான வாகனத் திறப்பு முறைகள் மற்றும் நகர்ப்புறப் போக்குவரத்தை ஆதரிக்கும் வகையில் பல புதிய அம்சங்களை சோதிக்க உள்ளது.

கார் உரிமையின் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகமான பயணிகள் மாற்றுப் போக்குவரத்து முறைகளை ஆராயத் தொடங்கியுள்ளனர். அதனால் ப்ளக்ஸாரை அறிமுகப்படுத்த இதுவே சரியான நேரம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த பொதுச் சோதனை ஓட்டத்தில் ஓட்டுநர் சேவைகளை Flexar வழங்காது. பயணிகள் இந்த தளம் மூலமாகவே வாகனங்களை முன்பதிவு செய்து ஓட்டிக் கொள்ளலாம்.

இதில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள், வைப்புத் தொகை அல்லது உறுப்பினர் கட்டணம் ஏதுமின்றி Singpass மூலம் இலவசமாக தளத்தில் பதிவு செய்யலாம்.

இந்த தளம் பல்வேறு வகையான மின்சார செடான் மற்றும் பாரம்பரிய SUV கார்களை வழங்குகிறது. மேலும் எரிபொருள் நிரப்புதல் மற்றும் சார்ஜ் செய்தல் ஆகியவற்றையும் பிளக்ஸர் கொண்டுள்ளது.

இந்த செயலி விரைவில் முக்கிய ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும் எனவும், சோதனை ஓட்டம் முடிந்ததும் அதிகாரப்பூர்வமாக இது பற்றிய முழு விவரங்களை அறிவிப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

பிளக்ஸாரில் விலை நிர்ணயத்தை பொருத்தவரை வெளிப்படையான நிமிட கட்டண மாதிரியைப் பயன்படுத்த உள்ளது. பயணம் எவ்வளவு நீளமோ அந்த அளவிற்கு விலை நிர்ணயிக்கப்படும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK