6 பேரை அதிரடியாக கைது செய்த சிங்கப்பூர் சுங்கத்துறை..!!
சிங்கப்பூர் சுங்கத்துறை மார்ச் 17ஆம் தேதி இரண்டு வார கால அமலாக்க நடவடிக்கையை தொடங்கியது.
அப்போது வியட்நாமிலிருந்து வரி செலுத்தப்படாத சட்டத்திற்கு புறம்பாக சிகரெட்டுகளை வாங்கிய 20 முதல் 38 வயதிற்கு உட்பட்ட ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆறு ஆண்களில் ஒருவர் மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர், ஒருவர் எஸ் பாஸ் வைத்திருப்பவர் மற்றும் ஒருவர் பணி அனுமதி அட்டை வைத்திருப்பவர் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களின் அடங்குவதாக சுங்கத்துறை நேற்று (ஏப்ரல் 17) முகநூலில் வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மூவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அமலாக்க நடவடிக்கையின் போது சட்ட அமலாக அதிகாரிகள் வரி செலுத்தப்படாத 98க்கும் மேற்பட்ட சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனால், ஏறத்தாழ S$13,000 மதிப்புள்ள சுங்க மற்றும் கலால் வரிகள் ஏய்ப்பு செய்யப்பட்டிருந்தன.
சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணைகளின் படி, கடத்தப்பட்ட சிகரட்டுகள் சமூக ஊடகங்கள் வழியாக வியட்நாமிய விற்பனை செய்பவர்களிடமிருந்து ஆர்டர் செய்யப்பட்டு அதன் பிறகு வாங்குபவர்களுக்கு விநியோகிப்பதற்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இது போன்ற சட்டத்திற்கு புறம்பான வரி செலுத்தப்படாத சிகரெட் களை வாங்குவது விற்பது அதை சேமித்து வைப்பது அல்லது பயன்படுத்துவது தவறு எனவும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையுடன் கூடிய தண்டனைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சட்டத்தின் படி விதி மீறல்களில் ஈடுபடுவோர் குறிப்பிடப்பட்ட வரி தொகையை போல் 40 மடங்கு அபராதம் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படலாம். மேலும் இதில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் மாணவர் அனுமதி சீட்டுகள் அல்லது பணிக்கான அனுமதி சீட்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இது போன்ற சட்டவிரோத செயல்களை பார்ப்பவர்கள் உடனடியாக இணையதளம் மூலமாக புகார் அளிக்கலாம்.