சிங்கப்பூர் துறைமுகத்தில் டிஜிட்டல் அனுமதிச் சேவை ..!! MPA அறிமுகம்..!!
சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA), அரசு நிறுவனங்களுக்கும் கடல்சார் இயக்குநர்களுக்கும் இடையே தரவுப் பகிர்வைச் சாத்தியமாக்கும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது துறைமுக அனுமதி நடைமுறைகளை விரைவுப்படுத்துவதற்கும், கப்பல்கள் நங்கூரமிடு நேரத்தை ஏறத்தாழ பாதியாக குறைப்பதற்கும் உதவுகிறது.
இந்த புதிய தொழில்நுட்ப தளமானது (OCEAN – X) தரவு மற்றும் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (App) பசிர்வை ஆதரிக்க முடியும் எனவும், அரசு நிறுவனங்கள் மற்றும் கடல் சார் நிறுவனங்கள் உள்ளிட கடல்சார் அமைப்புகள் நம்பகமான தரவை இது பகிர அனுமதிக்கும் எனவும் MPA சுட்டிக்காட்டி உள்ளது.
இதன் மூலம் துறைமுக செயல்பாடுகளின் செயல் திறனை மேம்படுத்தி, உலகளாவிய துறைமுகங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தவும், சுமூகமான கடல்சார் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் இந்த தளம் பயன்படும் என்று MPA கூறியுள்ளது.
OCEANS – X அறிமுகப்படுத்திய முதல் அம்சம் ஒரு டிஜிட்டல் துறைமுகம் அனுமதிச் சேவையாகும் இது கப்பல் தலைவர்கள் மற்றும் கப்பல் முகவர்கள் தங்களுக்கு தேவையான துறைமுக அனுமதி ஆவணங்களை இந்த அமைப்பிற்குள் உள்ள கடல் சார்ந்த அதிகார அமைப்பின் தளத்திற்கு நேரடியாக அனுப்ப அனுமதிக்கிறது.
இதன் மூலம் நேரம் சேமிக்கப்படுவதோடு, பிழைகளும் குறைக்கப்படுகின்றன. கப்பல் தலைவர்களும் கப்பல் முகவர்களும் துறைமுகத்திற்கு நுழைவதற்கு முன்பு தேவையான அனுமதி ஆவணங்களை உரிய இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு கப்பல் துறைமுக அனுமதி நடைமுறைகளை முடிக்க 10 முதல் 20 நிமிடங்கள் ஆவதாகவும், இந்த புதிய தொழில்நுட்பம் அந்த அனுமதி நேரத்தை பாதி அளவிற்கு குறைக்கும் என்று கடல்சார் பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் டிஜிட்டல் தீர்வு நிறுவனமான பங்கர்செயின், சிங்கப்பூர் துறைமுகத்திற்குள் நுழையும் கப்பல்களுக்கான அனுமதிச் சீட்டுகளை உருவாக்க OCEAN -X தளத்தைப் பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த அமைப்பானது கப்பல் நங்கூரமிட்ட பிறகு எரிபொருள் நிரப்பவும், பொருட்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளவும் அனுமதிக்கும் QR குறியீடுகளை உருவாக்குகிறது. கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறியவுடன் இந்த குறியீடுகள் சொல்லாமல் போய்விடும்.
இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து நிறுவனத் தலைவர் லின் யுவான் வே கூறியதாவது: முன்னர் கப்பல் அடையாள சரிபார்ப்பு மூன்றாம் தரப்பு தரவுகள் மூலம் செய்யப்பட வேண்டி இருந்தது. ஆனால் இந்த புதிய தளம் சேவை அதிக நேரத்தை சேமிப்பதாகவும், நம்பகத்தன்மை உள்ளதாகவும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இது செயல்திறனை மேம்படுத்தவும், பிழைகளைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல் நன்மதிப்பையும் நம்பிக்கையும் வலுப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.