இந்த வளாகமானது அனைத்து வயது வந்த மாணவர்கள் மற்றும் பணி பரியும் கல்வியாளர்களுக்கு ஒரு மையப்படுத்தப்பட்ட கற்றல் தளத்தை வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மையம் திறக்கப்பட காரணம்: மழலையர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு தலைமைத்துவம் இன்றியமையாதது என கல்லூரி குறிப்பிட்டுள்ளது.
தாய்மொழி வழி கற்பித்தலில் தங்கள் கற்பித்தல் திறனை மேலும் ஆழமாக கற்க விரும்புவதற்காக இந்த கல்லூரியின் மேம்பட்ட சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளை வழங்குகிறது.
தேசிய குழந்தை பருவ கல்வி நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திருமதி ஷி சூ-லிங் அவர்கள் இது குறித்து கூறியதாவது: “இரு மொழி கல்வி நமது நாட்டின் கல்வி அமைப்பின் அடித்தளமாக திகழ்கிறது. மேலும் இது மழலையர் கல்வியிலிருந்து தொடங்குகிறது. குழந்தைகளின் மொழி மீதான அன்பை தோண்டக்கூடிய சிறந்த தாய்மொழி ஆசிரியர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசிய குழந்தை பருவ கல்வி நிறுவனத்தில் நாங்கள் சான்றிதழ் படிப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாத எங்கள் ஆசிரியர்கள் பட்டம் பெற்றவுடன் சிறந்த தாய்மொழி ஆசிரியர்களாக மாறுவதை உறுதி செய்யும் விதத்தில் பட்டயங்களை பெறுவதற்கான வழிகளையும் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மழலையர் கல்வி நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட தலைமையகமும் கல்வி மையமும், மழலையர் கல்வி பயிற்றுநர்களுக்கான சிறந்த ஆதரவாகவும் அவர்களின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் தாய்மொழி கற்பித்தலின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.