சிங்கப்பூரின் 23-வது பாரம்பரிய விழா..!! மே 1ஆம் தேதி முதல் தொடக்கம்..!!
சிங்கப்பூர் : 23வது சிங்கப்பூர் பாரம்பரிய விழா, மே 1- ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “உள்ளூர் கடல்சார் கலாச்சார பாரம்பரியம் ” ஆகும்.
பாரம்பரிய விழாவில் 100-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. இந்த ஆண்டு (2026) நிகழ்வுகளில் துறைமுக வாழ்க்கையின் புதுமையான விளக்கங்களும், பாரம்பரிய கடல் சார்ந்த கலாச்சாரத்தைப்பொதுமக்கள் நேரடியாக அனுபவிக்க உதவும் நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளது.
இதில் தொடக்க விழாவாக “காலத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற நாடகம் சுமைத் தூக்குபவர்களால் நடிக்கும் நடிகர்களின் வழிகாட்டுதலுடன், சிங்கப்பூர் ஆற்றின் கதையை பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும்.
ஃபுல்லர்டன் பே ஹோட்டல் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கிளிஃபோர்ட் பியர் ஆகியவற்றின் பின்னணியில் அமைக்கப்பட்ட “போர்ட் ஆஃப் ட்ரீம்ஸ்” என்ற அசையும் நாடக நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.
இந்த பாரம்பரிய நிகழ்ச்சியின் திட்டமிடுபவரான டான் ஜூன்ஹுய் கூறியதாவது: இத்தகைய ஆழ்ந்த அனுபவத்தின் மூலம் பொதுமக்கள் சிங்கப்பூரின் வரலாறு மற்றும் கடல் சார்ந்த கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பற்றி ஆழமான தெரிந்து கொள்வார்கள் எனவும், சிங்கப்பூரின் கடந்த காலத்தை பற்றிய புரிதல்கள் மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தைப் போற்றி பாராட்டுவார்கள் என்றும் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்
சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையத்தின் 30-வது ஆண்டு நிநிறைவு ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு (2020) அந்த ஆணையம் வழிகாட்டுச் சுற்றுப்பயணங்கள், கப்பல் வருகைகள் மற்றும் கடல் சார்ந்த வழித்தடங்கள் உள்ள பல திட்டங்களைதத் தொடங்கியுள்ளது.
அதில் சிங்கப்பூரின் துறைமுக பாரம்பரியத்தை வெளி கொணர்தல் : ஒரு திரைக்கு பின்னான கடல்சார் பயணம் என்ற நிகழ்ச்சியானது உலகின் மிகவும் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றின் செயல்பாடுகளைப் பொதுமக்களுக்கு ஆழமாக விளக்குவதோடு மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு (2027) முதல் படிப்படியாக கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நகரில் உள்ள முனையம் போன்ற வசதிகள் உட்பட கொள்கலன் முனையத்தைப் பார்ப் வையிட ஒரு பேருந்து சுற்றுப்பயணத்திற்கும் அனைத்து செல்ல உள்ளார்கள்.
பரபரப்பான துறைமுகங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முதல் கடற்கரை ஓரம் வாழ்ந்து பணியாற்றிய சமூகங்கள் வரை இன்றளவும் தொடரும் ஒரு உயிர் உள்ள பாரம்பரியமாக விளங்கும் கடல்சார் பாரம்பரியம் சிங்கப்பூர் தேசிய அடையாளத்தை தொடர்ந்து வடிவமைத்து ஆழப்படுத்துகிறது.
பசார்ஃபிஷ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான லூயோங்கியி மூங்கில் மீன் கூடைகள் உள்ளூர் மீன்பிடி வரலாற்றின் ஒரு முக்கிய அங்கமாகும் எனவும், மக்கள் கடலுடனும், கடலோர இயற்கை சூழலுடன் எவ்வாறு இணக்கமாக வாழ்ந்தார்கள் என்பதையும் நிகழ்ச்சியின் மூலம் எடுத்துரைக்க விரும்புவதாக கூறியுள்ளாார்.
இந்த 23வது பாரம்பரிய விழா மே மாதம் 1ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை நடைபெறும். பொதுமக்கள் கூடுதல் விவரங்களையும் பதிவு தகவல்களையும் இணையதளத்தில் காணலாம்.