சிங்கப்பூரில் புதிய கல்வி மையம் திறப்பு..!! எதற்காக..??

சிங்கப்பூரில் புதிய கல்வி மையம் திறப்பு..!! எதற்காக..??

தேசிய குழந்தை பருவ வளர்ச்சி நிறுவனத்தின் புதிய தலைமையகம் மற்றும் கல்வி மையம் நேற்று (ஏப்ரல் 21) அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

நீ ஆன் பாலிடெக்னிக் வளாகத்தில் தேசிய மழலையர் கல்வி நிறுவனத்தின் புதிய மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகமானது அனைத்து வயது வந்த மாணவர்கள் மற்றும் பணி பரியும் கல்வியாளர்களுக்கு ஒரு மையப்படுத்தப்பட்ட கற்றல் தளத்தை வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மையம் திறக்கப்பட காரணம்:
மழலையர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு தலைமைத்துவம் இன்றியமையாதது என கல்லூரி குறிப்பிட்டுள்ளது.

தாய்மொழி வழி கற்பித்தலில் தங்கள் கற்பித்தல் திறனை மேலும் ஆழமாக கற்க விரும்புவதற்காக இந்த கல்லூரியின் மேம்பட்ட சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளை வழங்குகிறது.

யாருக்காக இந்த கல்வி மையம்?
மழலையர் கல்வியை மேம்படுத்தும் விதமாக மழலையர் கல்வி ஆசிரியர்களுக்கு இந்த சிறந்த மையமானது திறக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் தேசிய குழந்தை பருவ கல்வி நிறுவனம் சுமார் 62,000 க்கும் மேற்பட்ட கல்வியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய குழந்தை பருவ கல்வி நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திருமதி ஷி சூ-லிங் அவர்கள் இது குறித்து கூறியதாவது:
“இரு மொழி கல்வி நமது நாட்டின் கல்வி அமைப்பின் அடித்தளமாக திகழ்கிறது. மேலும் இது மழலையர் கல்வியிலிருந்து தொடங்குகிறது. குழந்தைகளின் மொழி மீதான அன்பை தோண்டக்கூடிய சிறந்த தாய்மொழி ஆசிரியர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேசிய குழந்தை பருவ கல்வி நிறுவனத்தில் நாங்கள் சான்றிதழ் படிப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாத எங்கள் ஆசிரியர்கள் பட்டம் பெற்றவுடன் சிறந்த தாய்மொழி ஆசிரியர்களாக மாறுவதை உறுதி செய்யும் விதத்தில் பட்டயங்களை பெறுவதற்கான வழிகளையும் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மழலையர் கல்வி நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட தலைமையகமும் கல்வி மையமும், மழலையர் கல்வி பயிற்றுநர்களுக்கான சிறந்த ஆதரவாகவும் அவர்களின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் தாய்மொழி கற்பித்தலின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK