உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!!

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு வெளிநாடு வேலைக்காக ஆன்லைனில் அப்ளை செய்திருப்பவர்களை குறி வைத்து ஒரு கும்பல் அவர்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்.

அவர்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ற அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை இருப்பதாக கூறி அதற்கான ஆஃபர் லெட்டரை(Offer Letter) தருகிறார்கள். அதன் பின் இதற்காக நீங்கள் மெடிக்கல் எடுக்க வேண்டும் என்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரை தேர்வு செய்து அதில் சென்று மெடிக்கல் செக்கப் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் ₹8000 கேட்டிருந்தார்கள். ஆனால் மெடிக்கல் செக்கப் எடுக்க ஒரு குறிப்பிட்ட நபர் சென்டருக்கு செல்லவில்லை.

காரணம் அந்த சென்டர் குறித்த உண்மை தகவலை அறிந்து கொண்டுள்ளார்.

வெளிநாடு செல்வதற்கான மெடிக்கல் செக்கப்பிற்கு இவ்வளவு பெரிய தொகையை செலுத்த வேண்டியது இல்லை.

₹3000 முதல் ₹4000 வரையில்தான் ஆகும். அவர்கள் கொடுக்கும் ஆபர் லெட்டர் போலியானது தயவுசெய்து யாரும் ஏமாற வேண்டாம்.

உங்களுக்கு அழைப்பு வரும் ஏஜெண்டுகளிடம் தமிழ்நாட்டில் அரசு அனுமதி உங்களிடம் உள்ளதா என்று கேட்டு அந்த அனுமதி எண்ணை வாங்கி சரிபார்த்துவிட்டு அதன் பின் முயற்சி செய்வது சிறப்பு.

இது போன்ற மோசடி குறித்த உண்மை சம்பவங்களை தெரிந்து கொள்ள நமது sgtamilan.com இணையதள பக்கத்தை பின் தொடருங்கள்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK