Online Games – க்கு மே 1 முதல் புதிய கட்டுப்பாடு..!!

Online Games - க்கு மே 1 முதல் புதிய கட்டுப்பாடு..!!

மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது இணைய விளையாட்டுகளை முறையாக கையாள்வதற்கு உண்டான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

விளையாட்டுகளை கண்காணிக்கவும் ஒழுங்கு படுத்துவதற்காகவும் புதிய ஆணையம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

E-Sports எனப்படும் மின்னணு கருவிகள் மூலமாக போட்டிகளை நடத்தும் நிறுவனங்கள் இந்த ஆணையத்தில் இனி கட்டாயமாக தங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும்.

பணப்பரிமாற்றம் இல்லாத சாதாரண சமூக இணைய விளையாட்டுகளை நடத்துகின்ற நிறுவனங்கள் பதிவு செய்ய தேவையில்லை என விதிகள் மூலம் எளிமையாகப்பட்டிருக்கிறது.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் எஸ். கிருஷ்ணன் இது குறித்த கூறியது, பந்தயம் கட்டி விளையாடப்படும் இணைய சூதாட்ட விளையாட்டுகளுக்கு ஏற்கனவே சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

திறமையை வெளிப்படுத்துகின்ற, E-Sports ஆரோக்கியமான சமூக விளையாட்டுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இந்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

இந்த புதிய சட்ட வரைமுறை மூலமாக, ஆன்லைன் விளையாட்டு துறையில் உள்ள வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும் அதே வேளையில் தேவையற்ற கெடுபிடிகளை குறைத்து, E-Sports துறையை மென்மேலும் வளர்ப்பதற்காகவும் மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

இந்த நடைமுறைகள் அனைத்தும் வருகின்ற மே 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK