தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!!

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை. இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாவார். இவரது மகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நாராயண பிள்ளை தனது பேத்திக்கு மகளைப் பொறுப்பாளராக பதிவு செய்து பூதப்பாண்டி தபால் நிலையத்தில் ஒன்றிய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி பேத்தியின் எதிர்கால தேவைக்காக பணம் சேமித்து வந்துள்ளார்.

இவ்வாறு அவர் ₹3.5 லட்சம் வரை செலுத்தியதாக தெரிய வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நாராயண பிள்ளை தபால் நிலையத்திற்கு சென்று பணம் செலுத்தினார்.

அதன் பிறகு தான் செலுத்திய மொத்த தொகை குறித்து கணக்கு பார்த்தபோது ₹3.5 லட்சம் குறைவாக இருப்பது தெரியவந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்த பூதப்பாண்டி தபால் நிலையத்திற்கு நேரில் சென்று அங்கிருந்து அதிகாரியிடம் புகார் அளித்திருக்கிறார்.

இதனை அடுத்து அதிகாரி அவர் வைத்திருந்த கணக்கு புத்தகத்தை வாங்கி ஆய்வு செய்வதில் குறிப்பிட்ட சில நாட்கள் நாராயண பிள்ளை செலுத்திய பணம் கணினி மூலம் கணக்கில் வரவு வைக்காமல் கைகளால் எழுதி முத்திரை இட்டு கொடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்த அதிகாரிகள் நாராயண பிள்ளை வீட்டுக்கு சென்று அவர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்திய கணக்கு புத்தகத்தைப் பெற்று அதனை ஆய்வு செய்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நாராயண பிள்ளை அவர்கள் கூறியது: “செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது உண்மைதான் இதில் யார்? யாருக்கு? தொடர்பு உள்ளது என விசாரணை நடந்து வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.

தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்தியதை கணினியில் வரவு வைக்காமல் இருந்ததால் பல கோடி ரூபாய் மோசடி ஏற்பட்டது. இது குறித்த தபால் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தபால் துறையின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ள தகவல் வெளியில் அம்பலமானதால் இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பணம் செலுத்தியவர்கள் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK