சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! என்ன நடந்தது..??

தெம்பனிசில் நேற்று (ஏப்ரல் 27) காலை தெம்பனிஸ் அவன்யூ 1, தெம்பனிஸ் அவன்யூ 8 சந்திப்பிற்கு அருகில் தனது கட்டுப்பாட்டை இழந்த கார் நடைபாதையில் நுழைந்து தெமாசெக் பல துற தொழிற் கல்லூரி வளாகத்தினுடைய வேலி மீது மோதியது.

இந்த விபத்து குறித்து தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு காலை 8:30 மணியளவில் கிடைத்ததாக தெரிவித்தனர். சமவெளிடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் காரில் இருந்தவரை பரிசோதித்து அவர்கள லேசான காயங்கள் இருப்பதை கண்டு மருத்துவமனைக்கு அழைத்த போது அவர் செல்ல மறுத்துள்ளார்.

பலத்துறை தொழிற் கல்லூரி வளாகத்திற்கு வெளியே அந்த கார் மற்றொரு காருடன் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாகவும் அது கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் ஏறி வேலி மீது மோதியதாகவும் தெரியவந்துள்ளது.

விபத்திற்கு பின் காட்சிகளை காட்டும் காணொளி மூலமாக பலதுறை தொழில் கல்லூரி மேற்கு நுழைவாயிலுக்கு வெளியே இருக்கும் நடைபாதையில் ஒரு கருப்பு நிற கார் ஒன்று வேலி மீது மோதி நிற்பது தெரிகிறது. மேலும் அந்த கார் இருக்கும் பகுதியை சுற்றி தடுப்பு வேலிகள் போடப்பட்டிருந்தன.

சில நேரத்திற்கு பிறகு சமவெளிடத்திற்கு சென்ற செய்தியாளர்கள் அந்த கார் நடைபாதைக்கு அருகில் இருந்த தீயணைப்பு குழாய் மீது மற்றும் ஒரு சிறிய மரத்தின் மீதும் மோதி இருந்தது தெரியவந்துள்ளது என்று கூறியிருந்தனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK