ஜூ செங் வீட்டில் பற்றிய தீ..!! 44 வயது ஆடவர் கைது..!!
பார்ட்லி பகுதியில் ஜூ செங் சாலையில் உள்ள பிளாக் 14இல் உள்ள கழக வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து இரவு 9:40 மணியளவில் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
தீப்பற்றி 18 வது மாடியில் உள்ள வீட்டில் முழுவதுமாக பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் இரண்டு தீயணைப்பாளர்கள் உட்பட 10 பேர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
10 பேர்களில் எட்டு பேர் புகையை சுவாசித்ததால் சிகிச்சை காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையின் போது தீ விபத்து வேண்டுமென்றே ஒரு ஆடவர் மூட்டியதாக தெரியவந்துள்ளது. இந்த சந்தேகத்தின் பெயரில் 44 வயதை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.