பார்ட்லி ஈஸ்ட் சாலையில் நடந்த லாரி விபத்து..!!

பார்ட்லி ஈஸ்ட் சாலையில் நடந்த லாரி விபத்து..!!

சிங்கப்பூர்: பார்ட்லி ஈஸ்ட் சாலையிலிருந்து பிராடெல் சாலை நோக்கி செல்லும் வழியில் நேற்று (மே 5) சாலை விபத்து ஏற்பட்டது.

இந்த சாலை விபத்து குறித்து காணொளியானது SG Road Vigilante என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

வேளையில் அடர் சாம்பல் நிற பிக்கப் டிரக் ஒன்று சிக்னல் காட்டாமல், வலது பாதையிலிருந்து இடது பாதைக்கு திடீரென திரும்பியதால் பாதையின் நடுவே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

திடீரென மோதியதில் மோட்டார் சைக்கிளும் அதிலிருந்த நபரும் தரையில் விழுந்தார். சைக்கிள் ஓட்டுநர் மெதுவாக சாலையின் ஓரமாக நகர்ந்து சென்று அமர்ந்தார். அந்த வழியே சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அவர் காயத்துடன் இருப்பதை பார்த்து அவரை பரிசோதிக்க உதவியுள்ளனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியும் அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

விபத்து குறித்த தகவல் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினருக்கு நேற்று (மே 5) காலை 8:30 மணி அளவில் கிடைத்ததாக கூறினர். பிறகு காயமடைந்த நபரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினர்.

இந்த விபத்தில் காயமடைந்த நபர் 31 வயதை சேர்ந்தவர் எனவும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய 58 வயதான பிக்கப் டிரக் ஓட்டுனர் விபத்து குறித்த விசாரணைக்கு உதவி வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.