சிங்கப்பூரில் சட்ட விரோத சுகாதாரப் பொருட்களை பறிமுதல் செய்த HSA..!!
சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) நேற்று (மே 7) ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு (2026) மார்ச் 10 முதல் 23 வரை நடைபெற்ற இன்டர்போல் தலைமையிலான ‘ஆபரேஷன் பாங்கேயா’ என்ற சோதனையின் நடவடிக்கை 90க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டதாக HSA குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது பதிவு செய்யப்படாத மருந்துகள், மருத்துவ சாதனங்கள், கலப்படம் செய்யப்பட்ட மூலிகைகள் மற்றும் மருந்து உபகரணங்கள் போன்ற சட்டவிரோத பொருட்களை கடத்த முயன்றவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையாகும்.
சிங்கப்பூரில் விளம்பர பக்கங்கள் அகற்றப்பட்ட பொருட்களில் பதிவு செய்யப்படாத காண்டாக்ட் லென்ஸ்கள், மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே வழங்கப்படும். முகப்பரு மற்றும் எக்சிமா களிம்புகள், பாலுணர்வை தூண்டும் மருந்துகள் மற்றும் மூக்கடைப்பு, ஒவ்வாமையை போக்கும் நாசி தெளிப்பான்கள் ஆகியவை இவற்றுள் அடங்கும்.
சிங்கப்பூரின் HSA இன்டர்போல் தலைமையிலான உலகளாவிய அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளூர் மின் வணிகம் மற்றும் சமூக ஊடக தளங்களில் இருந்து சுமார் 959 சட்டவிரோத சுகாதார பொருள் விளம்பர பக்கங்களை அகற்றியதுடன் 152 விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
அகற்றப்பட்ட தடை செய்யப்பட்ட சுகாதாரப் பொருள் பக்கங்களில் 82% காட்டிற்கும் அதிகமானவை பதிவு செய்யப்படாத காண்டாக்ட் லென்ஸ்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் காண்டாக்ட் லென்ஸ்களை விற்பது சட்டவிரோதமானது என அதிகாரிகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர். மருத்துவ சாதனங்களாக வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு செயல்திறன் மற்றும் தர நிலைகளுக்கு ஒன்றிணைவதை உறுதி செய்ய அவை அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல்வேறு சோதனை சாவடிகளில் HSA-வானது 6,641 சட்டவிரோத சுகாதார பொருட்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் HSA வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது சுமார் 88 விழுக்காடு தபால் மூலம் இடைமறிக்கப்பட்டது. மேலும் அவற்றில் பெரும்பாலானது மருத்துவரின் பரிந்துரைப்படி வழங்கப்படும் மருந்துகள் ஆகும்.
வலி நிவாரணிகள் அல்லது மயக்க மருந்துகள் சுமார் 36 விழுக்காடாகவும் ஐவர்மெக்டின் போன்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் 30 விழுக்காடாகவும் இருந்தன. சட்டவிரோதமான சுகாதார பொருட்களை இறக்குமதி செய்பவர்கள், அதை தயாரிப்பவர்கள் அல்லது விநியோகம் செய்பவர்கள் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், $100,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
மேலும் இது போன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளை கண்டறிகின்ற பொதுமக்கள் 68663485 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது hsa_is@hsa.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமோ புகார் அளிக்கலாம்.