மாணவர்களுக்கு பிரம்படியா..?? சிங்கப்பூர் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

மாணவர்களுக்கு பிரம்படியா..?? சிங்கப்பூர் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

சிங்கப்பூர் பள்ளிகளில் ஒழுங்கு நடவடிக்கையாக கல்வி அமைச்சர் டெஸ்மண்ட லீ அவர்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மே 5 அன்று நாடாளுமன்றத்தில் ஒரு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

இந்த திடீர் விதிமுறை எதற்கு?
பள்ளியில் நிகழ்கின்ற துன்புறுத்தல் சம்பவங்களுக்கு பிரம்படி கொடுப்பது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

மாணவர்களுக்கு பிரம்படி கொடுக்கும் விதிமுறை எதற்கு?
சிங்கப்பூர் பள்ளிகளில் மாணவர்களை திருத்துவதற்காக பயன்படுத்தப்படும் அனைத்து வழிமுறைகளிலும் பலன் கிடைக்காத பட்சத்தில் தான் இறுதி ஒழுங்கு நடவடிக்கையாக இந்த பிரம்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

அனைத்து ஆசிரியர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட முடியுமா?
பள்ளி முதல்வருடைய ஒப்புதலை பெற்ற பிறகு அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களால் மட்டுமே இந்த பிரம்படி விதிமுறைகளை நிறைவேற்ற முடியும்.

அனைத்து மாணவர்களுக்கும் இந்த விதிமுறை உட்படுமா?
தவறு செய்கின்ற மாணவருக்கு பிரம்படி கொடுப்பதற்கு முன்பு அந்த மாணவர் எந்த அளவிற்கு வயது முதிர்ச்சி உள்ளவராக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். மேலும், அந்த மாணவரின் தவறை திருத்திக்கொள்ள உதவுமா போன்ற பல அம்சங்களின் அடிப்படையில் பள்ளிகள் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பிரம்படி விதிமுறையை கையாளுகின்ற பள்ளிகளுக்கான விதிமுறைகள்:
👉பள்ளிகள் திறம்படியை மேற்கொள்வது புதிது அல்ல என்ற திரு லீ, தவறு செய்தால் அதன் பின் விளைவுகள் நிச்சயமாக இருக்கும் என்பதை வலியுறுத்தும் ஒழுங்கு நடவடிக்கையினுடைய ஓர் அங்கமாக இந்த பிரம்படி விதிமுறை இருக்கிறது.


👉பிரம்படி என்பது தனித்து வழங்கப்படுவது அல்ல; பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளின் உடைய ஓர் அங்கமாக இது கையாளப்படும்.

👉பிரம்படி விதிமுறை நிறைவேற்றப்பட்ட பிறகு மாணவரினுடைய நலனையும் முன்னேற்றத்தினையும் பள்ளிகள் கண்காணிக்கும் என்றும் செய்த தவறில் இருந்து பாடம் கற்க மாணவருக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும் விதிமுறைகளில் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK