ஃபிரண்டியர் விமான விபத்து..!! இயந்திர அறையில் ஏற்பட்ட தீப்பொறி..!!

ஃபிரண்டியர் விமான விபத்து..!! இயந்திர அறையில் ஏற்பட்ட தீப்பொறி..!!

கொலராடோ: ஃபிரண்டியர் விமான விபத்தில் சிக்கி பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது டென்வர் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்துள்ளது.

மே 8- ஆம் தேதி அன்று லாஸ் ஏஞ்சலுக்கு புறப்பட்ட ஃபிரண்டியர் விமானம், ஓடுபாதையில் இருந்த ஒரு பாதசாரி மீது மோதியுள்ளது. அதில் இந்த விபத்துஏற்பட்டிருக்கலாம் என்று விமான நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய அந்த பாதசாரி யார் என்பது குறித்து எந்த ஒரு அடையாளமும் இதுவரை தெரியவில்லை. அந்த நபர் வேலியைத் தாண்டி 2 நிமிடங்களில் ஓடுபாதையில் ஓடியதாக கூறப்படுகிறது.

அவர் விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் இல்லை என்பதையும் டென்வர் விமான நிலையம் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தால் 224 பயணிகளும் 7 விமான சிற்பந்திகளும் இருந்த ஏர்பஸ் ஏ231 விமானத்தின் இயந்திர அறையில் தீப்பொறி ஏற்பட்ட விமானத்திற்குள் புகை பரவி உள்ளது.

இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் முன்னெச்சரிக்கை காரணமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். விமானத்தில் இருந்த 12 பேருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் 5 சிகிச்சைக்காக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஃபிரண்டியர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து தகவல்களைத் திரட்டி வருவதாகவும் கூறியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு காலை 10:55 மணி அளவில் ஓடுபாதை வழக்க நிலைக்கு திரும்பி உள்ளது. இந்த நிலையில் பாதசாரி தாண்டி சென்ற வேலியை விமான நிறுவனம் ஆய்வு செய்ததில் அது சேதமடையாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK