சிங்கப்பூரை அச்சுறுத்தும் சிறுநீரக நோய்..!! 2 லட்சம் பேர் பாதிப்பு..!!
சிங்கப்பூரில் கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது.
இதனால் பொது சுகாதார துறைக்காக வெளியே செயல்படும் “மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி” என்ற மருந்தகங்கள் இத்தகைய சிறுநீர் நோய்களைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பொது மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை சுகாதார அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. சிறுநீரக நோய் மோசமாகி நாட்டின் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான தேவை அதிகரிப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18 வயது முதல் 74 வயது வரை சிங்கப்பூரர்களிடையே 2023 ஆம் ஆண்டுக்கும் 2024 ஆம் ஆண்டுக்கும் இடையே நாட்பட்ட சிறுநீரக நோய் 13.9% அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சகம் மக்கள் தொகை சுகாதார ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. அதில் 2019 ஆம் ஆண்டு முதல் 2020 வரை இருந்த 8.7% விட சுமார் 60% இந்த சிறுநீரக நோய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சிறுநீரக நோய் என்பது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீரக சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சிறுநீரின் வடிகட்டும் திறன் படிப்படியாக குறைகிறது.
இதன் முதல் கட்டத்தில் சிறுநீரகத்தில் சில குறைபாடுகள் இருப்பது தெரியவரும். அந்த கட்டத்தில் சிறுநீரில் புரதம் அதிகமாக இருப்பதாக காட்டினாலும் சிறுநீரகம் தொடர்ந்து செயல்படும்.
ஆனால் 5-வது கட்டத்தில் சிறுநீரகம் முழுவதும் செயலிழக்கும் நிலையை அடைகிறது. அப்போது சிறுநீரக சுத்திகரிப்பு அல்லது சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று டாக்டர் ஜேசன் குறிப்பிட்டார்.