போலீஸ் வாகனத்தில் அத்துமீறி நுழைந்த பெண்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

போலீஸ் வாகனத்தில் அத்துமீறி நுழைந்த பெண்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சிங்கப்பூரில் போலீஸ் வாகனத்தில் அத்துமீறி நுழைந்து உள்ளே இருந்து புகைப்படம் எடுத்ததாக கூறப்படும் 23 வயதான பெண் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண் எடுத்த காணொளி ஆனது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தானே முன்வந்து காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.

Kaypoh.sg என்ற சமூக ஊடகப் பக்கம் இன்ஸ்டாகிராமில் இது குறித்த ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளது. வெள்ளை நிற ஆடை அணிந்து குதிரைவால் கொண்டை போட்ட ஒரு பெண் இரவில் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு போலீஸ் வாகனத்தை நோக்கி மெதுவாக நடந்துச் சொல்வது அதில் தெரிகிறது.

பின்னர் அப்பெண் அபாய விளக்குகள் ஒளிர்வதை பொருட்படுத்தாமல், அந்த வாகனத்தில் ஏறி முன்பக்கப் பயணி இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

இந்த காணொளிகளின் இறுதியில் அந்த பெண் காவல் வாகனத்தில் இருந்து தலையை வெளியே நீட்டி இருக்கிறார். மேலும் அந்த காணொளியின் தலைப்பில் பணி நிறைவு ஏறியது! வணக்கம்! என்று எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து சிங்கப்பூர் காவல்துறை கூறியதாவது: சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து காவல்துறைக்கு தெரியும் என்று கூறியுள்ளது.

மேலும் 23 வயதான அந்த பெண் மே மாதம் 12ஆம் தேதி அன்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்து உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்தப் பெண் தற்போது அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் மீதான விசாரணைக்கு காவல்துறையினருக்கு ஒத்துழைத்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த விசாரணையை காவல்துறைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK