ஜூலை மாதம் எரிபொருள் விலைகள் தற்பொழுது போல தொடர்ந்து உயர்ந்தால், அமைச்சகம் நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட வரம்பு வரையிலான கட்டணங்களை உயர்த்திக் கொள்ளும் உரிமையை அந்த நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் ஏப்ரல் மாதம் முதல் அத்தகைய நிறுவனங்களுக்கு ஏற்கனவே தற்காலிக நிதி ஆதரவை கல்வி அமைச்சகம் வழங்கி வந்தது.
அந்த தற்காலிக உதவி 13% போக்குவரத்து கட்டண வரவாய்க்கு ஈடாக இருந்தது. ஜூன் மாதத்திற்கு பிறகும் எரிபொருள் விலை அதிகமாகவே இருந்தால், பள்ளிப் பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் தங்களது இயக்க செலவுகளை ஈடு செய்வதற்கு, கூடுதல் எரிபொருள் கட்டணத்தை விதிக்க அனுமதி உள்ளது.
அதிகபட்ச கட்டணத்தை அமைக்கும் பேருந்து நிறுவனங்கள் அந்த தொகை வரை கட்டணத்தை உயர்த்த முடியும்.
புதிய பள்ளிப் பேருந்துக் கட்டணங்கள் குறித்த தகவல்களைப் பெற்றோர்களுக்கு தெரிவிக்கும் முன்பு, ஜூன் மாதத்தில் கட்டண உச்சவரம்பு குறித்து அந்த நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த கூடுதல் நிதி உவதவியானது மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்பட உள்ளது.