ஜப்பானின் Aichi – Nagoya ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும்.
ஆசிய விளையாட்டுகளின் 200 மீட்டர் போட்டியில் தங்கம் வென்றுள்ள சாந்தி பெரேரா, பாய்மரப் படகு வீரர் ராயன் லோ ஆக இருவரும் தங்கள் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள போட்டியிடுவர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த முறை சீனாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது சிங்கப்பூர் 16 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த முறை ஜப்பானில் நடக்க உள்ள போட்டியில் பங்கு பெறுகின்ற விளையாட்டு வீரர்கள் குறித்த இறுதி விவரம் போட்டிகள் நெருங்கும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.