சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய யுக்தி..!!

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய யுக்தி..!!

சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றான் 156,000 அரசாங்க அதிகாரிகள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு புதிய யுக்தி கையாளப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முகவர் போல செயல்படுகின்ற மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு பதிவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தரவு பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அதை தடுத்து தங்களது பணிகளை தொடர்வதற்கு இந்த பதிவகமானது உதவும்.

செயற்கை நுண்ணறிவு முகவர் மென்பொருளின் உரிமையாளர்களையும் நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்கு உதவுகின்ற ஒரு பாதுகாப்பு அம்சமாக இந்த பதிவகம் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகளை இயந்திர வேகத்தில் எடுத்து அது செயல்படுத்தும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குறியீடாக்கம் செய்வது முதல் அறிக்கைகளை தயாரிப்பது, சந்திப்பு கூட்டங்களை திட்டமிடுவது வரை போன்ற எல்லாவற்றிற்கும் இந்த செயற்கை நுண்ணறிவை அரசாங்க ஊழியர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்ற சூழலில் அவர்களுடைய செயல்களை கூர்ந்து கண்காணிக்க அரசாங்க தொழில்நுட்ப முகமையின் தொழில்நுட்ப அம்சங்களின் தொகுப்பிற்கான ஒரு பகுதியாக இந்த பதிவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

AI Assistant Tesk என்ற இந்த தொகுப்பு அரசாங்க ஊழியர்களுக்கு தேவையான ஒரு பாதுகாப்பு மின் இலக்க உதவியாளரை வழங்கும் நோக்கத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று கவ்டெக் தலைமை நிர்வாகி கோ வெய் பூன் தெரிவித்தார்.

விதிகள் அங்கீகரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகள் பதிவகம் ஆகியவற்றை கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்த விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு முகவர் மென்பொருளை அரசாங்க அதிகாரிகள் சரியாக பயன்படுத்துவதை தங்களால் உறுதி செய்து கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு முகவர்கள் என அழைக்கப்படுபவை பயனர்களின் இலக்குகளை அடைவதற்காகவும், பணிகளை முடிப்பதற்காகவும் அவர்கள் சார்பாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் மென்பொருள் அமைப்புகள் ஆகும்.

இதுபோன்று இன்னும் தயாரிப்பில் உள்ள AI Assistant Tesk நான் என் பிற்பகுதியில் மிகவும் பரவலாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் இது தற்போது அரசாங்க அதிகாரிகள் சிலரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK