மின்சார ஈல் மீனின் உடலில் என்ன ரகசியம் இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..??

மின்சார ஈல் மீனின் உடலில் என்ன ரகசியம் இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..??

இயற்கையின் விந்தையான படைப்புகளில் மின்சார மீன்கள், அதாவது ‘எலக்ட்ரிக் ஈல் மீன்கள்’ வியப்பூட்டும் ஒரு உயிரினமாக கருதப்படுகிறது.

தண்ணீருக்குள் சாதுவாக வலம் வரும் இந்த மீன்களை சாதாரணமாக கருதி, பெரிய மீன்கள் பிடிக்க முயற்சி செய்யும். அப்போது, இந்த மின்சார ஈல் மீனில் இருந்து பாயும் மின்சாரம் பெரிய மீனை சட்டென்று சாகடித்துவிடும்.

இந்த வகை மீன்கள் எப்படி மின்சாரத்தை உடலில் உருவாக்குகின்றன?
பொதுவாக, மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் உடல் செல்களும் சிறிய அளவில் மின்சாரத்தை உருவாக்குகின்றன.

மூளை, நரம்புகள், இதயம் அனைத்தும் இந்த மின்சார சிக்னல்களால் இயங்குகின்றன. ஆனால், சில மீன்கள் இந்த திறனை மிகவும் மேம்படுத்தி தற்காப்புக்கு பயன்படுத்துகின்றன.

மின்சார ஈல் மீனின் உடலில் ‘எலோக்ட்ரோலைட்ஸ்’ எனப்படும் ஆயிரக்கணக்கான சிறப்பு செல்கள் உள்ளன. இவற்றை சிறிய பேட்டரிகள் என்று சொல்லலாம். ஒரு எலக்ட்ரோலைட் அமைப்பு சுமார் 0.15 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

மின்சார ஈல் மீனின் உடலில் தொடர்ச்சியாக ஏராளமான எலக்ட்ரோலைட் கட்டமைப்பு உள்ளது. அடுத்தடுத்து பல பேட்டரிகளை தொடர்ச்சியாக இணைத்தால் வோல்டேஜ் அதிகம் ஆவது போல், ஒரு எலக்ட்ரோலைட் செல்லில் உருவாகும் 0.15 வோல்ட் மின்சாரம் போல், பல எலக்ட்ரோலைட்டுகள் அடுத்தடுத்து மின்சாரத்தை வெளிப்படுத்தும்போது இறுதியில் அதிக மின்சாரம் உருவாகிறது.

இந்த மின்சாரம் சில நொடிகள் மட்டுமே வெளியிடப்படுகிறது. ஆனால், இந்த மின்சாரம் அந்த மீனின் எதிரிகளை சமாளிக்க போதுமானது.
இதன் காரணமாக இந்த மீன்கள் ‘மின்சாரம் உற்பத்தி செய்யும் உயிருள்ள பேட்டரிகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK