சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..??
சிங்கப்பூரில் ஜூன் 21ஆம் தேதி இரவு சுமார் 11:55 மணியளவில் அப்பர் சாங்கி சாலையில் இந்த திருட்டு நடந்ததாக தெரியவந்துள்ளது.
அங்கே இருந்த ஒரு நபர் $100,000 மதிப்புள்ள டெதர்(USDT) கிரிப்டோ கரன்சியை வாங்க சந்தேக நபரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பணம் செலுத்த இருந்த நேரத்தில் அவர் ஒரு பெஞ்சில் பாதி ($50,000) பணத்தை வைத்துள்ளார்.
அந்த தருணத்தை பயன்படுத்தி ஒரு ஆடவர் $50,000 ரொக்கத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
உடனே பாதிக்கப்பட்ட நபர் திருட்டு நடந்த நேரம் மற்றும் இடத்தை காவல்துறையிடம் சென்று புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து காவல்துறை எடுத்த நடவடிக்கையில் சம்பவ இடத்தில் நேரடி விசாரணை நடத்தியும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், பாதிக்கப்பட்ட நபரிடம் மேற்கண்ட முதல் கட்டளை விசாரணையின் போது சந்தேகப்பட்ட நபரை சந்திக்க ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டதை அடுத்து பெடொக் காவல் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
புகார் கொடுத்த ஒரு நாளைக்குள் திருடிய அந்த நபரை பெடோக் காவல்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
பணத்தையும் மீட்டெடுத்தனர். இது குறித்த காவல்துறையினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து $50,000 ரொக்கம் திருடப்பட்டதாகவும் இது குறித்து புகார் வந்ததை அடுத்து ஒரு நாளைக்குள் குற்றவாளியை பிடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் செய்த குற்றத்திற்கு குற்றவியல் சட்டத்தின் 379 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 24) குற்றம் சாட்டப்பட்டது.