கண்ணாடி அறையில் உலக கோப்பை கால்பந்து காட்சி..!! S$60,000 க்கும் மேல் சம்பாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள்..!!
கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு வினோதமான வேலை வாய்ப்பை FOX நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் FIFA கால்பந்து போட்டிகளை கண்டு ரசித்து அதற்கு உண்டான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் ஒரு கனவு வேலையாக FOX நிறுவனம் அறிவித்துள்ளது.
கால்பந்து ரசிகர்களுக்கான இந்த கனவு வேலையானது FIFA உலக கோப்பையை ஒட்டி FOX Sports மற்றும் FOX One நிறுவனங்களால் Indeed வேலைவாய்ப்பு தளத்தின் மூலமாக இந்த வேலை அறிவிப்பு உருவாக்கப்பட்டது.
இந்த வேலைக்கான தகுதிகள்: ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சாம்பியன்களிடம் FOX நிறுவனம் சில அடிப்படை தகுதிகளை எதிர்பார்த்துள்ளது.
அனைத்து போட்டிகளையும் தொடர்ந்து பார்க்கும் ஆர்வமும் சகிப்புத்தன்மையும் உள்ளவராக கால்பந்து மீது மிகுந்த மோகம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
போட்டிகள் குறித்த சுவாரசியமான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுதல் அவசியம்.
கண்ணாடி அறையில் ஆயிரக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்க்கும் போது கேமரா முன் எந்த தயக்கமும் இல்லாமல் உற்சாகத்துடன் பேசுவது முக்கியமான ஒரு அங்கமாக உள்ளது. இந்த வேலை வாய்ப்பு தளத்தின் மூலமாக இரு அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள்: ஆஸ்டின் பிராங்கிளின் மற்றும் கெவின் அகோட்டோ ஆவர்.
இந்த கனவு வேளையில் முக்கிய அம்சங்கள்: இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் உள்ள கண்ணாடி அறையில் தங்கி அணைத்துப் போட்டிகளையும் பார்க்க வேண்டும். மொத்தமாக 39 நாட்கள் நடைபெறும் 104 போட்டிகளை பார்க்க வேண்டும்.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை மொத்தமாக 39 நாட்கள் வேலை நேரமாகும். போட்டிகளை பார்க்கின்ற தலா ஒவ்வொருவருக்கும் S$64,000 சம்பளம் வழங்கப்படும்.
போட்டிகளை முழுமையாக கண்டு களிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களது அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் டிஜிட்டல் கன்டென்ட் ஆக உருவாக்க வேண்டும் என்றும் நிபந்தனை உள்ளது.