சிங்கப்பூரின் பிரபலமான திரையரங்கு விற்பனை...!! வாங்க தகுதிகள் என்னென்ன..??
சிங்கப்பூரின் பீச் ரோட்டில் (Beach Road) அமைந்துள்ள Golden Mile Tower வணிக வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற திரையரங்க பகுதி S$31 மில்லியன் என்ற விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான CBRE, இந்த வணிகப் பகுதியை விற்பனை செய்வதற்கான பிரத்யேக முகவராக நியமிக்கப்பட்டு, விருப்பக் கடிதம் (Expression of Interest – EOI) கோரும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
இதன் விற்பனை விலையானது S$31 மில்லியன் (ஒரு சதுர அடிக்கு தோராயமாக S$295). இதன் மொத்த பரப்பளவு பல அடுக்குகளில் பரவியுள்ள சுமார் 104,991 சதுர அடி ஆகும்.
தற்போது 4 திரையரங்க அரங்குகள் (Auditoriums) மற்றும் 3, 4-வது மாடிகளில் அலுவலக இடங்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 2,000 நபர்கள் அமரக்கூடிய இருக்கை வசதி உள்ளது.
இப்பகுதியில் பாலிவுட் மற்றும் பிராந்திய மொழித் திரைப்படங்களை வெளியிடும் Carnival Cinemas Singapore இயங்கி வருகிறது.
வாங்குபவர்கள் இந்த இடத்தை 2,000 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய பிரம்மாண்ட அரங்காக மாற்றலாம் அல்லது ஊடகத் தயாரிப்புக் கூடம் (Media Studio), உடற்பயிற்சிக் கூடம் (Gym) அல்லது நிகழ்விடமாக (Event Venue) மாற்றிப் பயன்படுத்தவும் தகுந்த அனுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினரும் மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த வணிகச் சொத்தை எவ்வித தடையும் இன்றி வாங்கத் தகுதி பெற்றுள்ளனர் என்ற விதி விளக்கையும் அறிவித்துள்ளது.