கிளவுட் நிறுவனங்களுக்கு செக் வைத்த சிங்கப்பூர் அரசு..!! புதிய சட்டம் அறிமுகம்..!!

கிளவுட் நிறுவனங்களுக்கு செக் வைத்த சிங்கப்பூர் அரசு..!! புதிய சட்டம் அறிமுகம்..!!

சிங்கப்பூரில் உள்ள பெரிய கிளவுட்(Cloud) மற்றும் தரவு மைய(Data Centre) நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் டிஜிட்டல் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ஒரு புதிய மசோதாவை அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை 1 2026) அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்விளக்க கட்டமைப்பு மசோதா (DIB) இன்று புதிய சட்ட வரைவை சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள முக்கிய தரப்பு மையங்கள் மற்றும் கிளவுட் சேவை வழங்கும் நிறுவனங்கள் இனி அரசின் சிறப்பு உரிமத்தை கட்டாயமாக பெறவேண்டும்.

சிங்கப்பூர் பயனர்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக S$100 மில்லியன் வருவாயீட்டும் பெரிய கிளவுட் நிறுவனங்களுக்கும் 3 மெகாவாட் அல்லது அதற்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகின்ற தரவு மையங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

இணைய பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது சேவை தடங்கல்கள் ஏற்பட்டால் அது குறித்த உடனடியாக IMDA அமைப்பிற்கு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

தரவு மையங்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகவும் திறம்படவும் பயன்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளையும் இந்த மசோதா பரிந்துரைக்கிறது.

இந்த வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் கருத்துக்களை வரும் ஜூலை 22 2026 காலை 10 மணி வரை தெரிவிக்கலாம் என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விதிகளின் படி விதிகளை மீறும் அல்லது சேவைகளில் பெரிய குளறுபடிகள் ஏதேனும் ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கும் S$1 மில்லியன் அல்லது அவற்றின் வருடாந்திர வருவாயில் 10% வரை அபராதம் விதிக்க சிங்கப்பூர் தகவல் ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) முடிவு செய்துள்ளது.

இந்த மசோதா உருவாக்கப்பட்டதன் காரணம் கடந்த காலங்களில் ஏற்பட்ட இணைய சேவை முடக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளை கருத்தில் கொண்டு இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK