FIFA உலகக் கோப்பை டிக்கெட் விலை உயர்வு..!! கடுமையாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப்..!!
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸசிகோ ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் FIFA 2026 உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்கா பங்கேற்கும் முக்கிய போட்டிகளுக்கான டிக்கெட்டுகளின் விலை 4 இலக்கங்களை($1,000+) தொட்டுள்ளதால், நுகர்வோர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் நாளிதழுக்கு டொனால்ட் டிரம்ப் பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் உலகக்கோப்பை டிக்கெட் விலை உயர்வு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் “உண்மையை சொல்லப்போனால் நானும் அந்த விலையை கொடுக்க மாட்டேன் ; சாதாரண நடுத்தர மக்களும், தீவிர கால்பந்து ரசிகர்களும் இந்த ஆட்டங்களை காண மைதானத்திற்கு வர முடியாத அளவிற்கு இந்த விடலை உயர்வுள்ளது நியாயமற்றது” என்று தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு உலக கோப்பையில் FIFA அமைப்பு அறிமுகப்படுத்திய டைனமிக் விலை நிர்ணய முறை (Dynamic Pricing) காரணமாக டிக்கெட்டுகளின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
சாதாரண இருக்கைகளின் விலையே பல ஆயிரம் டாலர்களாக விற்கப்படுவதால், மைதானங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரும் பணக்காரர்களுக்கும் மட்டுமேயான இடமாக மாறி வருவதாக கால்பந்து ஆர்வலர்கள் இந்த விலை உயர்வு குறித்து குற்றம் சாட்டுகின்றனர்.
நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்களின் அட்டர்னி ஜெனரல்கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் இந்த விவகாரத்தை ஏற்கனவே விசாரிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டிரம்பின் இந்த வெளிப்படையான கருத்து சமூக கருத்தானது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.