செம்பாவாங்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் தீப்பிடித்து, அதிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவது போன்ற காணொளியை சிங்கப்பூரா சேனல் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு மாலை 5:15 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கும் விரைந்து வந்தனர்.
வெலிங்டன் சர்க்கிளின் ப்ளாக் 512 -ல் 10வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்த படுக்கையறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர் நீர்த்தாரை பீரங்கிகளைக் கொண்டு தீயை அணைத்தனர். விபத்தில் புகையை சுவாசித்த ஒருவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SCDF வீரர்கள் தெரிவித்தனர்.
குடியிருப்பில் தீ வைத்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.