சிங்கப்பூர் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! ஜூலை 8 முதல்..!!
2027 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி சேர்க்கை குறித்து நேற்று (ஜூலை 2) சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தாயகம் திரும்பும் சிங்கப்பூர் மாணவர்கள் வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி முதல் உள்ளூர் உயர்நிலைப் பள்ளிகள், தொடக்க கல்லூரிகள், மிலேனியா கல்வி கழகம் ஆகியவற்றில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என கல்வி அமைச்சூர் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டிற்கான (2027) சேர்க்கை சிங்கப்பூருக்கு திரும்பும் மாணவர்களுக்கான பள்ளி சேர்க்கை நடவடிக்கை எனப்படும் மையப்படுத்தப்பட்ட தகுதிச் சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் நடைபெறும்.
உயர்நிலை 1 முதல் 3ஆம் வகுப்புகளில் சேர விரும்புவோர் ஜூலை 8 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கான ஆங்கிலம் கணித தகுதிச் சோதனைகள் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெறும்.
அதற்கான தேர்வுகள் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நடத்தப்படும் இவற்றிற்கான முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட மாணவர்கள் 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பள்ளிகளில் இணைவர்.
தேசிய பொது தேர்வுகள் நடைபெறும் முக்கிய ஆண்டுகள் என்பதால் உயர்நிலை 4, பகுமுக வகுப்பு 2 ஆகிய வகுப்புகளில் பொதுவாக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட மட்டார்கள் என்பதையும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாத தகுதி சோதனைகளில் கலந்து கொள்ள முடியாத உயர்நிலை மாணவர்கள் மாற்று ஏற்பாடாக டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் கூடுதல் செயற்கை நடவடிக்கை தேர்வை எழுதலாம்.
அதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். வீட்டுக்கு அருகே உள்ள பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் உறுதியளிக்கப்பட்டபள்ளிச் சேர்க்கை வசதி மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இதில் மையப்படுத்தப்பட்ட தேர்வுகளுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட பள்ளியே நடத்தும் பள்ளி சார்ந்த மதிப்பீடுகள், நேர்காணல் மூலம் மாணவர்களுக்கு பொருத்தமான நிலை வகுப்பு தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கும் பின்வரும் இணையத பக்கத்தில் பார்க்கலாம். www.mor.gov.sg/returning-singaporeans