சிங்கப்பூர் சாலையில் விசித்திரமாக நடந்து கொண்ட நபர்..!! இணையத்தில் வைரல்..!!

சிங்கப்பூர் சாலையில் விசித்திரமாக நடந்து கொண்ட நபர்..!! இணையத்தில் வைரல்..!!

சிங்கப்பூர்:நேற்று (ஜூலை 1)  செராங்கூன் சென்ட்ரல் டிரைவில் உள்ள பிளாக் 261 அருகே ஒரு நபர் விசித்திரமான செயலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டுள்ளது.பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்டதற்காக அந்த நபரை சிங்கப்பூர் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்த காணொளியானது சமூக ஊடக பக்கங்களில் பரவி வருகிறது. அதில் அந்த நபர் பரபரப்பான சாலையின் நடுவே நடந்து சென்று கத்துவது தெரிகிறது.

அவர் எதிரே வரும் வாகனங்களை மீண்டும் மீண்டும் மறித்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்துள்ளார். பின்னர் அந்த நபர் தனது கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்ததாக இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அந்த நபரின் அந்த செயல்பாட்டால் அவருக்கு  தலையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். இந்த செயலானது எதிர்பார்க்காத விதமாக இருந்ததாகவும், அவரால் எழ முடியாது வகையில் தரையில் விழுந்ததாகவும் இதனை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

அவர் கீழே விழுந்த பிறகு அருகில் இருந்தவர்கள் அவருக்கு உதவ முன் வந்துள்ளனர். அப்பொழுது அந்த நபர்ஸ் சுயநினைவுடன் இருந்துள்ளார். அவரது முகத்தில் தெளிவான காயங்கள் இருந்ததாகவும், தலையில் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் பாதுகாப்பு படையினருக்கு (SCDF) காலை 10.15 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காயமடைந்த அந்த நபரை மீட்புப் படையினர் உடனடியாக செங்காங் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

வோக் ஹே நிறுவனம் தங்களுக்கு புகார் குறித்த செய்தி தெரியும் எனவும், SFA-ன் விசாரணைக்கு தங்களது நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கும் எனவும் கூறியுள்ளது.

பொதுமக்கள் விதிமுறைகளுக்கு இணங்காத எந்த ஒரு உணவு வணிக நிறுவனத்தையும் www.sfa.gov.sg/feedback என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து தங்களது புகார்களை தெரிவிக்கலாம் SFA தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK