116 வயதில் மூதாட்டி செய்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!!

116 வயதில் மூதாட்டி செய்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!!

திருப்பதி ஏழுமலையானை வழிபட தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அவர்களில் பலர் திருப்பதியில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு வழியாக மலைப்பாதையில் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே திருமலைக்குச் சென்று ஏழுமலையானை வழிபடுவதை பாக்கியமாக கருதுகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி வெங்கடேஸ்வர சுவாமி மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியால் திருப்பதிக்கு வந்துள்ளார்.

தனது தள்ளாடும் வயதிலும் தனது குடும்பத்தினரின் உதவியுடன் நடை பயணமாக மலைப்பாதையில் 3 ஆயிரத்து 550 படிக்கட்டுகள் ஏறி 9 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற திருமலையை அடைந்துள்ளார்.

பின்னர் அவர் திவ்ய தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். வயதையும் பொருட்படுத்தாமல் அவர் திருமலை மலை படிகளை ஏறி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பக்தர்களை நிகழ்ச்சி அடைய செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK