டிக் டாக்கில்(Tik Tok) வைரலாகும் வீடியோ..!! LTA வெளியிட்ட எச்சரிக்கை..!!
சிங்கப்பூரில் ஜூலை 6 ஆம் தேதி அன்று டிக் டாக்கில் பதிவிடப்பட்ட ஒரு காணொளி பதிவானது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அந்த காணொளி பதிவில், பயணி ஒருவர் பேருந்து ஓட்டுனரிடம் “அவரது ஓட்டும் நடத்தை குறித்து கேள்வி எழுப்புவதும் அவரை தவறாக ஓட்டுகிறார் என கடுமையாக விமர்சித்தும் மேலும் ஓட்டுநரை வேகமாக பேருந்து ஓட்டுமாறு அந்த பையனை வலியுறுத்துவது” அந்த காணொளி பதிவில் தெரியவந்துள்ளது.
பின்னர் அந்த பயணி தனக்கு ஒரு வகுப்பு இருப்பதாகவும் குறிப்பிட்ட நேரத்தில் அவர் அந்த இடத்திற்கு சென்றடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் பேருந்து ஓட்டுனர் அவர் கூறிய அழுத்தமான வார்த்தைகள் மத்தியில் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்துள்ளார். அவருடைய நிலையான இயக்க நடைமுறைகளின் படியே வாகனத்தை ஓட்டுவதாகவும் எல்லா நேரங்களிலும் சாலை நிலவரங்களை கவனிக்க வேண்டிய இருப்பதாகவும் பயணிகளுக்கு அவர் விளக்கி உள்ளார்.
இது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று (ஜூலை 15) தனது முகநூல் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளது. பயணிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, பேருந்து ஓட்டுநர்கள் தங்களது கடமைகளை செய்யும்போது பயணிகளின் பாதுகாப்பு தற்போது உள்ள போக்குவரத்து நிலவரங்கள் மற்றும் சேவையின் உடைய நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பேருந்து ஓட்டுனர்கள் வேகத்தை கட்டுப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் இது பேருந்துகள் நெருக்கமாக செல்வதை தடுக்கவும் வழித்தடத்தில் உள்ள அனைத்து பயணிகளும் மேலும் சீரான மற்றும் நம்பகமான பேருந்து சேவைகளை பெறுவதற்காகவும் உதவுகிறது.
அந்த பேருந்திற்கு சொந்தமான பொது பேருந்து நிறுவனமான டவர் ட்ரான்ஸ்லேட் பயன அட்டவணையை சரிபார்த்த பிறகு பேருந்து ஓட்டுனர் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி பேருந்து போட்டி வருவதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
இது குறித்த சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் டவர் ட்ரான்ஸ்லேட் நிறுவனமானது ஓட்டுநர்களை பயணிகள் அச்சுறுத்தவோ அல்லது தொந்தரவு செய்யவும் கூடாது என வலியுறுத்தியுள்ளது.
பயணியின் தூண்டுதலுக்கு பிறகும் ஓட்டுநர் பதற்றம் அடையாமல் தொழில் முறை பண்போடு பாதுகாப்பாக செயல்பட்டதற்காக டவர் ட்ரான்ஸிப் நிறுவனமானது ஓட்டுநரை பாராட்டியுள்ளது. ஓட்டுநர் கவனத்தை சிதறடிக்கும் வகையில் பேசுவது சாலையில் உள்ள இதர வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் ஏதேனும் குறைகள் அல்லது கருத்துக்கள் தெரிவிக்க விரும்பியவர்கள் ஓட்டுநர்களிடம் நேரடியாக பயணம் செய்யும்போது கூறாமல் அதிகாரப்பூர்வ கருத்து படிவங்கள் மற்றும் வழிகள் மூலமாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று LTA தெரிவித்துள்ளது.