ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!!

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து...!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!!

மலேசியாவின் ஜோகூர் குலாய் அருகே உள்ள வடக்கு- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (NSE) கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது .

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் சிங்கப்பூரைச் சேர்ந்த 56 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார்.

இந்த கோர விபத்தானதுநேற்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் 2:05 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.

நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் பகுதியில் வாகனப் போக்குவரத்து மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த 56 வயது நபரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வலது தடத்தில் 32 வயது சிங்கப்பூர் பெண் ஓட்டிச் சென்ற சொகுசு ரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.

அதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக குலாய் மருத்துவர் உதவியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

அவருடன் பயணித்த மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் 39 வயது நபருக்கு வலது தொடையில் எலும்பு முறிவும், 57 வயது நபருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

இருவரும் குலாய்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து குலாய் காவல் துறை துணை ஆணையர் டான் செங் லீ க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.