சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி:ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு!

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி: ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில், நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களின் தேசிய தினச் செய்தி (National Day Message) வரவிருக்கும் சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 8) ஒளிபரப்பப்பட உள்ளது.

​நாட்டின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூக ஒற்றுமை குறித்த பிரதமரின் முக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய இந்த உரை, சிங்கப்பூரின் 4 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் ஒளிபரப்பப்படுவது வழக்கம்.

ஒளிபரப்பு மற்றும் நேர விவரங்கள்:
👉ஆங்கிலம்(பிரதமர் லாரன்ஸ் லாரன்ஸ் வோங்): மாலை 6.45 மணிக்கு CNA தொலைக்காட்சி மற்றும் CNA938 வானொலியில்

👉 மாண்டரின் (துணைப் பிரதமர் கான் கிம் யோங்): இரவு 7:00 மணிக்கு ஒளி வழி 8(Channel8) மற்றும் கேப்பிட்டல் 958 வானொலியில்.

👉 மலாய் (தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகமது) :இரவு 8:30 மணிக்கு சூர்யா (Suria) ஒளிவழியில்.

👉 தமிழ் (துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்) : இரவு 9:00 மணிக்கு வசந்தம் ஒளிவழி மற்றும் ஒலி 96.8FM வானொலியில்.

முதன்முறை ஒளிபரப்புகள் நிறைவடைந்தவுடன், 4 மொழி தேசிய தின செய்திகளும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (PMO) மற்றும் அதன் Youtube பக்கத்திலும் பொதுமக்கள் காணலாம்.

தேசிய தினக் கொண்டாட்டங்களின் தொடக்கமாக அமையும் இச்செய்தியைக் காணவும் கேட்கவும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.