திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி..!!ரூ.3.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி..!!ரூ.3.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமானt நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.3.50 கோடி போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம், போதைப் பொருட்கள், அரியவகை உயிரினங்கள் கடத்தி வரப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1) இரவு மலிந்தோ விமானம் மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது.

இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள், சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் அவர் தனது உடமையில் மறைத்து ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 3 கோடி 500 கிராம் ஹைட்ரோபோனிக் என்னும் கஞ்சாவடி விலான போதைப் பொருளைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அவர் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் (வயது 38) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவரிடம் இருந்து ஹைட்ரோபோனிக்கை வாங்கி செல்ல வந்த தங்கபாண்டி என்பவரையும் அதிகாரிகள் பிடித்துள்ளனர். தங்கபாண்டி மற்றும் நடராஜனை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே அதிக அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.