அமேசானில் 8 வயது சிறுவன் ஆர்டர் செய்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்…!!!

அமேசானில் 8 வயது சிறுவன் ஆர்டர் செய்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்...!!!

அமெரிக்காவின் கெண்ட்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது வீட்டு வாசலுக்கு வெளியே லாலிபாப் பெட்டிகள் குவிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவை அனைத்தும் தனது மகன் வாங்கிய மிட்டாய்கள் என்பதை பிறகுதான் கண்டுபிடித்தார்.

8 வயது சிறுவன் தனது தாயின் செல்போனைப் பயன்படுத்தி அமேசானில் இருந்து லாலிபாப்களை வாங்கியுள்ளான்.

22 பெட்டிகளில் சுமார் 70,000 குச்சிமிட்டாய்கள் இருந்தன.

பள்ளியில் நடைபெற உள்ள விழாவில் நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக லாலிபாப்களை வாங்கியதாகச் சிறுவன் கூறினான்.

இந்த லாலிபாப்களின் மதிப்பு $4,000 (சுமார் 5,000 வெள்ளி).

அவற்றைப் பார்த்த அதிர்ச்சியில் தனக்கு மயக்கமே வந்துவிட்டதாகச் சிறுவனின் தாய் கூறினார்.

அந்தப் பெண், வங்கியிடமும் அமேசான் நிறுவனத்திடமும் பேசி பொருட்களைத் திரும்பத் தந்து பணத்தைத் திரும்பப் பெற முயற்சி செய்து வருவதாக கூறினார்.