சிங்கப்பூரில் மனைவியிடம் தனது தகாத நடத்தையை பற்றி கூறிய பணிப்பெண்ணுக்கு நடந்த சோகம்!!

சிங்கப்பூரில் தனது தகாத நடத்தை பற்றி மனைவியிடம் கூறியதால் பெல்ட்டை பயன்படுத்தி அடித்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் செப்டம்பர் 2022 ல் நடந்தது. அந்த நபரின் மனைவி பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.அவர்களுடன் பாதிக்கப்பட்ட பணிப்பெண் வசித்து வந்தார்.அந்த நபர் பணி பெண்ணிடம் பாலியல் ரீதியாக தூண்டும் வார்த்தைகளை வெளிப்படுத்தி அதை ரகசியமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.ஆனால் பணிப்பெண் அந்த நபரின் மனைவியிடம் இந்த சம்பவத்தை கூறியுள்ளார். இது அந்த நபருக்கு கடும் கோவத்தை ஏற்படுத்தியது.
அந்த நபர் பணிப்பெண்ணின் அறைக்குள் நுழைந்து பணிப்பெண்ணை அறைந்து படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று தலை மற்றும் பின்புறத்தில் பலமுறை பெல்டால் அடித்தார்.மனைவி அவரை தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை.பணிப்பெண்ணுக்கு தலையில் ரத்த காயமும், முகத்தில் காயங்கள் மற்றும் உடலில் பல பகுதிகளில் வலி ஏற்பட்டது.பணிப்பெண்ணின் தலையில் இருந்து ரத்தம் வருவதாக அவரது மனைவி எச்சரித்த பிறகு தான் அவர் அடிப்பதை நிறுத்தினார்.
பெல்ட்டை பயன்படுத்தி பணிப்பெண்ணை அடித்த நபருக்கு மூன்று மாதச் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு $1000 வெள்ளி இழப்பீடும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
