குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளைக் கண்காணிக்க ஒரு புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சமூகத்தில் அவர்கள் மீதான பார்வையை மாற்ற உதவும் என்று நம்பப்படுகிறது.
சாதாரண ஸ்மார்ட் வாட்ச் போல தோற்றமளிக்கும் இந்த சாதனம், குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கப் பயன்படுகிறது.
முன்பு, அத்தகைய நபர்களுக்கு தங்களது கணுக்காலில் சாதனம் பொருத்தப்பட்ட பட்டை கட்டிவிடப்படும்.
கால் பட்டையுடன் ஒப்பிடும்போது, இதன் எடை குறைவாகவும், அளவில் சிறியதாகவும் இருக்கும்.
இதனால் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளை பொதுமக்கள் அடையாளம் காண்பது ஓரளவு தவிர்க்கப்படுகிறது.
இந்த அமைப்பு சந்தேகம் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளைத் தவிர்க்க உதவும் என்று சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை நம்புகிறது.
இந்த ஏற்பாடு குற்றவாளிகளுக்கு புதிய நண்பர்கள், புதிய இடங்கள், புதிய வேலைகள் போன்றவற்றைத் தேடுவதற்கான நம்பிக்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைப்பு நடைமுறையில் இருந்தாலும் கணுக்கால் சாதனம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
மேலும் குற்றவாளிகள் தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப சாதனத்தை எங்கு அணிய வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.
இத்தகைய மாற்றத்தால் குற்றவாளிகள் தன்னம்பிக்கையான ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
