உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் உணவு மற்றும் இறைச்சியை பதப்படுத்தி விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா?

உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் உணவு மற்றும் இறைச்சியை பதப்படுத்தி விற்றால் என்ன தண்டனை என்று தெரியுமா?

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி Neythal Road -ல் உள்ள ஒரு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி ஒரு உணவு கடைக்கு வழங்கியதை கண்டறிந்துள்ளனர்.

ஆனால் அந்த நிறுவனத்திற்கு உணவை பதப்படுத்தவோ அல்லது வழங்கவோ உரிமம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உறைந்த கடல் உணவுகள் உட்பட 800 கிலோகிராமுக்கும் அதிகமான உணவை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சிங்கப்பூரில் உணவு பொருட்களை சட்டவிரோதமாக பதப்படுத்தி வழங்குதல் குற்றமாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதல் முறை $5000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.

மீண்டும் மீண்டும் குற்றம் செய்தால் $10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் $2000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan