விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!!

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!!

சிங்கப்பூர்: நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மலேசியா-சிங்கப்பூர் எல்லைக்கு இடையே சட்டவிரோதமாக செயல்பட்ட 7 வாடகை வாகன ஓட்டுநர்களைக் கைது செய்து, அவர்களது வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை LTA எடுத்துள்ளது.

தேசிய தனியார் வாடகை வாகன சங்கம் மற்றும் தேசிய டாக்ஸி சங்கம் அளித்த ரகசிய தகவல்களின் பெயரில் இந்த அதிரடி சோதனையை LTA நடத்தியது . இந்த சோதனையானது பனியனீர் மற்றும் சாங்கி விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்டதில் இந்த ஓட்டுநர்கள் சிக்கி உள்ளனர்.

ஜூலை 2025 முதல் தற்போது வரை உள்ள உரிமம் இல்லாத எல்லை தாண்டிய பயணங்களைத் தடுப்பதற்காக 5000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சிங்கப்பூர் சட்டத்தின்படி சட்டவிரதமாக எல்லை தாண்டிய வாகன சேவைகளை வழங்குபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். அதன்படி $3000 வரை அபராதமும், 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் நிரந்தரமாக பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

முறையான காப்பீடு மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் இது போன்ற சட்டவிரோத வாகனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு LTA அறிவுறுத்தி உள்ளது.

சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை go.gov.sg/report-illegal-rides என்ற இணைய தளம் மூலம் புகார் அளிக்கலாம் என LTA பொதுமக்களுக்கு கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK