தேவாலயத்தில் நடந்த சர்ச்சை..!! 5 வார சிறை தண்டனை விதிப்பு..!!

தேவாலயத்தில் நடந்த சர்ச்சை..!! 5 வார சிறை தண்டனை விதிப்பு..!!

சிங்கப்பூர்: எண் 144 பிரின்செப் ஸ்ட்ரீட்டில் உள்ள சிங்கப்பூர் லைப் சர்ச் தேவாலயத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்துள்ளது.

மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தர வாசியமான 33 வயது வீ சூன் மிங் நேற்று (ஜூன் 22) தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது தேவாலயம் ஒன்றில் இருந்து இதற்கு முன்பாக இலவசமாக பைபிள்களை எடுத்துச் சென்ற அவர் மீண்டும் ஒரு பைபிளை எடுக்க நினைத்துள்ளார்.

அதை எடுக்க நினைத்தபோது தடுக்கப்பட்டதால் ஆவேசமடைந்துள்ளார். உடனே தேவாலயத்திலிருந்து வெளியேறிய அவர் அங்கு வழிபாட்டிற்கு வந்த ஐந்து பேரை அறைந்துள்ளார். மேலும் அதில் பெண் ஒருவருக்கு மூக்கிலிருந்து ரத்தம் கசிந்துள்ளது.

இதனை அடுத்து ஆத்திரமடைந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அப்போது வேண்டுமென்றே காயம் விளைவித்த இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். இதர நான்கு குற்றச்சாட்டுகளும் அவருக்கு தண்டனை விதித்தின்போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தேவாலயத்திற்கு வந்தவர்களை குற்றம் சாட்டப்பட்டவர் அறைந்ததற்கு சமய ரீதியான எந்த ஒரு தூண்டுதலும் பின்னணியோ இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட வீ அவர்களுக்கு நீதிமன்றம் 5 வார சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK