நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..??

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..??

சிங்கப்பூர்: நேற்று (ஜூன் 22) மதியம் விரைவுச் சாலையின் மையத் தடுப்பில் மோதி ஒரு லாரி கவிழ்ந்துள்ளது. மணல் ஏற்றிச் சென்ற அந்த லாரி கவிழ்ந்ததால் சாலையில் மணலும் சரலைக் கற்களும் சிதறிக் கிடந்துள்ளன.

டாக்ஸிஸ் கனெக்ட் குரூப் டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின்படி, ஒரு பெரிய லாரி ஒன்று விரைவுச்சாலையும் மையத்தடுப்பில் கிடந்தது. மேலும் அதற்கு எதிர்பாக்கத்தில் நுண்ணிய மணல் கொட்டிக் கிடப்பதும் தெரிகிறது.

பாதிக்கப்பட்ட சாலைப் பகுதியில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற போக்குவரத்து கூம்புகள் வைக்கப்பட்டிருப்பதும் அந்தக் காணொளியில் தெரிகிறது. மற்றவர்கள் லாரியுல் இருந்து மணலை தோண்டி எடுத்து சாலையில் குவித்து வைப்பதையும் அந்த காணொளியில் காண முடிகிறது.

லாரி நடுத்டுப்பில் மோதியதில் மரங்கள் மீது நேரடியாக தாக்கியதால் கிளைகளையும் அடிமரங்களையும் அகற்றும் பணிக்காக ஒரு கிரேன் சம்பவ இடத்தில் நின்றது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறையினருக்கு நேற்று (ஜூன் 22) பிற்பகல் சுமார் 2:35 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டம்பைன்ஸ் விரைவுச் சாலையில் இருந்து பான் ஐலேண்ட் விரைவுச் சாலையை நோக்கிச் சென்ற இடத்தில் விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை உறுதி செய்துள்ளது.

விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் இருந்ததாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்த போது அதை அவர் மறுத்து விட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து காரணமாக சாலையின் இரு திசைகளிலும் ஒரு வழித்தடம் தடுக்கப்பட்டதால் போக்குவரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்பட்டது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK