a project to help enrich the future of youth

இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்க உதவும் திட்டம்..!!!

இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்க உதவும் திட்டம்..!!!

a project to help enrich the future of youth
a project to help enrich the future of youth

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளூர் தனியார் நிறுவனமான ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “Youth Connect Psychological Intervention Framework” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது சமூகத்தில் 10 முதல் 19 வயது வரையிலான இளைஞர்களுக்கு உளவியல் ஆதரவை வழங்க உதவுகிறது.

இது Temasek அறக்கட்டளையின் Youth Connect திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இது லேசானது முதல் மிதமான மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் நோக்கத்தை கொண்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் Kk பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை இளைஞர்களின் மனநலம் குறித்த ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.

இதில் சுமார் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்த 40% டீனேஜர்களுக்கு தூக்கப் பிரச்சினைகள் இருந்தன.

மூன்றில் ஒரு பங்கிற்கு குடும்ப மோதல்கள் மற்றும் கல்வி அழுத்தம் இருந்தன.

கால் பகுதிக்கும் அதிகமானோர் கொடுமைப்படுத்துதல் போன்ற தனிப்பட்ட உறவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில டீனேஜர்கள் மன அழுத்தம் அல்லது தற்கொலை, நாள்பட்ட தலைவலி மற்றும் வயிற்று வலி போன்ற உடல் மற்றும் மன அறிகுறிகளுக்கு மருத்துவ சிகிச்சையை நாடினர்.

மேலும் அத்தகைய அறிகுறிகள் உளவியல் துயரத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

புதிய கட்டமைப்பின் கீழ், டீனேஜர்கள் துயரத்தின் மூல காரணங்களைப் புரிந்துகொள்ளவும், எதிர்மறை சிந்தனையைச் சமாளிக்கும் திறன்களை வளர்க்கவும், கல்வி மன அழுத்தம், குடும்ப மோதல், சக உறவுச் சிக்கல்கள் தாழ்வு மனப்பான்மை,மின்னணு சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரச்சனைகளை ஆலோசகர்களின் மூலம் தீர்வு காண முடியும்.

இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இளைஞர்கள் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை அடையாளம் கண்டு உளவியல் ரீதியான மீள்தன்மையை வளர்க்க உதவும் வகையில், 300க்கும் மேற்பட்ட பள்ளி ஆலோசகர்கள் மற்றும் சமூக மனநல பயிற்சியாளர்கள் கட்டமைப்பின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர்.

KK மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் மூத்த ஆலோசகரும், திட்டத் தலைவருமான டாக்டர் ஹாங் சூயிங், பள்ளிகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் ஆரம்பகால தலையீடு மிக முக்கியமானது என்று கூறினார்.

இந்தத் தலையீட்டு நடவடிக்கைகள் மூலம், இளைஞர்கள் உளவியல் ரீதியான மீள்தன்மையை வளர்த்துக் கொள்ளவும், பிரச்சினைகளின் ஆரம்ப கட்டத்தில் உதவியை நாட முடியும் என்று கூறுகிறார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan