சிங்கப்பூரில் 6 பயண நிறுவனங்களின் உரிமம் ரத்து...!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் அல்லது வருடாந்திர வணிக மேலோட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதற்காக 6 உள்ளூர் பயண நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட பயண நிறுவனங்கள்:
👉 ஜெமினி டிராவல் அண்ட் டூர்ஸ் இன்டர்சிஸ் 👉 எஸ்ஜிவான்கா 👉 VS டிராவல் 👉 விஸ்ஃபேர் டிராவல் 👉 ஜெய்ன் டிராவல்ஸ்.
அவற்றில், VS Travel நிறுவனம் அதன் உரிம விதிமுறைகளின்படி குறைந்தபட்சம் S$17958.20 நிகர மதிப்பை பராமரிக்கத் தவறிவிட்டது.
எனவே ஆறு பயண நிறுவனங்களும் இனி எந்த பயண வணிகத்தையும் நடத்த முடியாது என்று சுற்றுலா வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இதனால் ஏற்கனவே டிக்கெட் புக்கிங் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனம் பணத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் அல்லது மாற்று நடவடிக்கையாக உரிமம் பெற்ற பயண நிறுவனங்களிடம் வாடிக்கையாளர்களின் பயணத்தை தொடர திட்டமிடலாம்.