சிங்கப்பூரில் இ-சிகரெட் பதுக்கல்…!!! இளைஞர் மீது பாயும் 6 குற்றச்சாட்டுகள்…!!!

சிங்கப்பூரில் இ-சிகரெட் பதுக்கல்...!!! இளைஞர் மீது பாயும் 6 குற்றச்சாட்டுகள்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான இ-சிகரெட் பொருட்களை விற்பனை செய்து பதுக்கி வைத்திருந்ததாக 27 வயது உள்ளூர் நபர் சின் வெய் லியாங் மீது இன்று (18.07.2025) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றப்பத்திரிகையின்படி, புகையிலை விளம்பரம் மற்றும் விற்பனைத் தடைக் சட்டத்தை மீறியதாக மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.

இந்த மாதம் ஜூலை 10 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் பிஷான் தெரு 13, பிளாக் 189 மற்றும் பிளாக் 175 இல் உள்ள இரு யூனிட்களில், 800க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவை விற்பனைக்காக வைத்திருந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.

சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகளை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் அல்லது வழங்குதல் அனைத்தும் சட்டவிரோதமாகும்.

முதல் முறை குற்றம் செய்தால் $10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். மீண்டும் குற்றம் செய்தால் $20,000 வரை அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan