தெம்பனிஸ் கார் விபத்தில் இருவர் பலி!!

தெம்பனிஸ் கார் விபத்தில் இருவர் பலி!!

தெம்பனிஸ்சில் சென்ற ஆண்டு 2024 ஏப்ரல் 22ஆம் தேதி 6 வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் தெமாசெக் தொடக்க கல்லூரி மாணவி உட்பட இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்திற்கு காரணமான ஆடவர் வரும் அக்டோபர் 23ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கிறார்.

ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு முந்தைய கலந்துரையாடலில் முகமது சையாஃபி இஸ்மாயில், 44 தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கான தேதி உறுதி செய்யப்பட்டது.

இவர் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி மரணம் விளைவித்தது ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி காயம் ஏற்படுத்தியது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது ஆகியவை தொடர்பில் குற்றசாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டது.

இவர் போக்குவரத்து சமைக்கை விளக்கு சிவப்பாக இருந்த நேரத்தில் காரை நிறுத்த தவறியதாகவும். அதை அடுத்து அவரது கார் மூன்று கார்கள் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.

அவரது காரால் மோதப்பட்ட முதல் கார் சுழன்று தலைகீழாக கவிழ்ந்ததுடன் ஒரு வேன் மீது மோதியது அந்த வேன் சிறிய ரக பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் 57 வயது பெண்ணும் 17 வயது மாணவியும் உயிரிழந்தனர்.

ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி மரணம் விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈர ஆண்டு முதல் 8 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்படலாம் அத்துடன் குற்றவாளியின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி காயம் ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரு ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையோ அல்லது பத்தாயிரம் வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan