மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்...!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை...!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் “கருணை தண்டனை” வழங்கப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மனிதாபிமானக் காரணங்களுக்காக,சில குற்றவாளிகளுக்கு வழக்கம்போல இல்லாத வகையில் கருணை தண்டனைகளை வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இவை குற்றங்களை மன்னிக்கவில்லை என்றாலும்,மனிதநேயத்தின் அடிப்படையில் சிறைத்தண்டனைக்கு பதிலாக இலகுவான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
மேலும் இது குறித்து சீனியர் வழக்கறிஞர் சியாவோ ஜின்யாவோ தெரிவித்ததாவது, “கருணை தண்டனை என்பது குற்றம் குறைவானது என்பதற்கான அறிகுறி அல்ல; அது நபரின் உடல்நிலை, மருத்துவ அவசரத்தேவை, மற்றும் உயிருக்கு நேரும் ஆபத்தை மதித்துச் செய்யப்படும் ஒரு நியாயமான பரிசீலனை” என்று கூறினார்.
கடந்த காலத்தில் பல வழக்குகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
எடுத்துக்காட்டாக 2008ம் ஆண்டு, துங் கவிதை சங்க முன்னாள் தலைவர் துங் வை-ஷுவாங், தனது உயிர் காப்பாற்ற சிறுநீரகம் வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அவரது உடல் நிலை மோசமாக இருந்ததால், நீதிபதி அவருக்கு ஒருநாள் சிறைத்தண்டனை மற்றும் $17,000 அபராதம் விதித்தார். துங் பின்னர் சிறுநீரக தானம் பெற்று, சில ஆண்டுகள் வாழ்ந்து 2022ஆம் ஆண்டில் 69 வயதில் மரணமடைந்தார்.
AIDS மற்றும் லிம்போமா நோயால் பாதிக்கப்பட்ட மற்றொருவர்,பழக்கமான திருட்டு மற்றும் போதைப்பொருள் குற்றவாளி. அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், நீதிபதி ஒருநாள் அடையாளச் சிறைத்தண்டனையுடன் வழக்கை முடித்தார்.
இதேபோல் 2020ம் ஆண்டு VDZ v VEA வழக்கில், நிலை 4 மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு சிறைதண்டனைக்கு பதிலாக HK$5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நீதிமன்றம் சிறைவாசம் அவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கின. மல்டிபிள் மைலோமா நோயால் பாதிக்கப்பட்ட ஓங் எஸ்.ஈஸ்வரனுக்கு உதவிய குற்றத்தில் குற்றம் ஒப்புக்கொண்டார்.
அரசுத் தரப்பே அவரது நிலையைப் புரிந்து கொண்டு சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் கோரியது.நீதிபதி கருணை காட்டி, சிறைமுடக்கம் தவிர்த்து அபராதத்தையே விதித்தார்.
சிங்கப்பூர் சட்டத்துறை விவரங்களின்படி, ஆண்டுக்கு பத்துக்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே இந்த மாதிரியான கருணை தண்டனைகள் பதிவாகின்றன.
இந்த வழக்குகள் அசாதாரணமானவை என்றாலும், மருத்துவ தரவுகளின் அடிப்படையில் நியாயமானவை என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். “சட்டத்திற்கும், மனித உணர்வுக்கும் இடையில் சமநிலை தேவை”, என வழக்கறிஞர் சியாவோ குறிப்பிட்டார்.
இது சட்டத்தின் அழகு என்றும் கடுமையான தண்டனையை மட்டுமல்ல,கருணையையும் உள்ளடக்கியதாக உள்ளது என்று கூறப்படுகிறது.