சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய விவகாரம்…!!! 28 வயது நபருக்குச் சிறை…!!!

சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய விவகாரம்...!!! 28 வயது நபருக்குச் சிறை...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வங்கிக் கணக்குத் தகவல்களை விற்க பிறரை நியமித்த 28 வயதான டான் மிங் சுவான் என்பவர், தனது கூட்டாளியின் மீது சந்தேகம் கொண்டு, அவரை மிரட்டியதுடன் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

2022 மார்ச்சில், 25 வயதுடைய பாதிக்கப்பட்டவர், விரைவில் பணம் சம்பாதிக்க விரும்பிய நிலையில் டானுடன் சேர்ந்தார். டான், அவரிடம் ஒரு வங்கிக் கணக்கை திறக்கச் சொன்னார். பின்னர், அந்த கணக்கில் சந்தேகத்துக்கிடமான பணப்பரிவர்த்தனைகள் நடந்தன. இதை அறிந்த பாதிக்கப்பட்டவரின் தந்தை, வங்கி கணக்கை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்தார்.

டான், தனது கணக்கு முடக்கப்பட்டதை அறியாமல், அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர் ஏமாற்றியதாகக் கருதி, தனது நண்பர்களுடன் சேர்ந்து, 2022 செப்டம்பர் 12ம் தேதி அவரை சந்தித்து தாக்கினார். மேலும், சிறுநீர் நிரப்பிய பாட்டிலைக் கொடுத்து, அதை குடிக்க கட்டாயப்படுத்தினார். பாதிக்கப்பட்டவர் ஒரு பகுதியை குடித்த பிறகு, மீதமுள்ளதை தலை மீது ஊற்றும் படி கட்டாயப்படுத்தப்பட்டார்.

இந்தக் கடுமையான தாக்குதல் மற்றும் மிரட்டல் சம்பவம் தொடர்பாக, டானுக்கு நான்கு மாதம் மற்றும் எட்டு வார சிறை தண்டனை மற்றும் $300 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் சிங்கப்பூர் காவல்துறையினரால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.மேலும் வங்கிக் கணக்குகளை தவறான நோக்கங்களுக்காக வழங்குவது குற்றமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan