எதிர்கால சிங்கப்பூர் குறித்த பிரதமரின் உரை..!! சிங்கப்பூரின் அடுத்த கட்டம் என்ன...??
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம், இளைஞர்கள், முதியோர் மற்றும் எதிர்கால பாதை குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங் விரிவாக பேச உள்ளார்.
அவர், வருகிற ஞாயிற்றுக்கிழமை (17.08.2025) தேசிய தினப் பேரணி உரையை நிகழ்த்துவார்.
பிரதமர் வோங் இன்று (15.08.25) சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியில், சிங்கப்பூரின் பொருளாதாரத் திட்டங்கள், இளைஞர்கள் மற்றும் முதியோருக்கான கொள்கைகள், மேலும் 60வது ஆண்டு விழாவுக்குப் பின் நாட்டின் வளர்ச்சி பாதை குறித்து பேசுவதாக தெரிவித்தார்.