சிங்கப்பூரில் சாலை விபத்து..!!!

சிங்கப்பூரில் சாலை விபத்து..!!!

சிங்கப்பூர்: ஆகஸ்ட் 20 அன்று இரவு 10:05 மணி அளவில் லாவண்டர் ஸ்ட்ரீட்டில் இழுவை வண்டியை மோதிவிட்டு நிற்காமல் ஆடவர் ஒருவர் சென்றுள்ளார் இன்று தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

கார் ஓட்டுனர் விபத்து நடந்த பிறகு அங்கிருந்து சென்று விட்டார். காயமடைந்தவருக்கு உதவி செய்யவில்லை. காவல்துறைக்கு தகவலும் தெரிவிக்கவில்லை.

விபத்தின் மூலம் காயம் ஏற்பட்ட 57 வயது இழுவை வண்டி ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சோதித்த பிறகு இறந்துவிட்டார் என்பது தெரிய வந்தது.

விபத்து நடக்க காரணமாக இருந்தால் 33 வயது கார் ஓட்டுனரை காவல்துறை 25 ஆகஸ்ட் அன்று கைது செய்தது.

இழுவை வண்டியை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக சந்தேகிக்கப்பட்ட ஆடவர் இன்று (27 ஆகஸ்ட்) குற்றம் சாட்டப்படவிருக்கிறார்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி ஒருவரை மரணத்தை ஏற்படுத்தியதற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்படும்.

அவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம், அனைத்துரக வாகனங்களை ஓட்டும் உரிமத்தையும் இழக்க வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக 3000 வெள்ளி அபராதமும் 12 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan